போப் பெனெடிக்ட் XVI அவர்கள் இராக்கின் அமைதிக்காக உரத்தக் குரலெழுப்பியுள்ளார். தமது மிகவும் கடுமையான முறையிலான கோரிக்கையைக் கடந்த (16.03.2008) ஞாயிற்று கிழமையன்று அவர் வெளியிட்டார். கடத்தப் பட்ட சால்டியன் கத்தோலிக் ஆர்ச் பிஷப்பின் உடல் மோசூல் நகரத்தின் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அவர் இக்கோரிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இராக்கில் தொடரும் இடைவிடாப் போரினால் இராக்கியர்கள் சமூக வாழ்க்கை முழுதும் சீர்குலைந்து விட்டதாக அதில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ''பலிகள் போதும்; வன்முறைகள் போதும்; இராக்கில் நிலவும் வெறுப்புணர்வுகள் போதும்" என்று பெனெடிக்ட் அவர்கள் ஸெயின்ட் பீட்டர் ஸ்குவெரில் ஞாயிறு அன்று நடந்த தமது திருச்சபையின் உரையின் இறுதியில் மக்களின் கைத்தட்டல் ஆதரவு முழக்கத்துக்கிடையில் கூறினார்.போப் அவர்கள் ஆழமான உணர்ச்சிகளுடன் இந்த உளப்பூர்வமான கோரிக்கையை விடுத்து, ''இராக்கில் படுகொலைகளையும் வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் நிறுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.''அதே நேரத்தில் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போரினால் ஏற்பட்ட தனிப்பெரும் இழப்புகளும் சமூக வாழ்வில் ஏற்பட்ட சீர்குலைவையும் பாதிப்புகளையும் தாங்கி வரும் இராக்கிய மக்களிடமும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்: "இராக்கில் உள்ள எல்லா மத-இனக் குழுக்களும் பழங்குடிக் குழுவினரும் ஒன்றிணைந்து, தங்களுக்கிடையே மன்னிப்பு, நீதி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் போன்ற சுமுகநிலையை உருவாக்கித் தலை நிமிர்ந்து வாழ்வதற்கானத் தங்கள் வாழ்க்கை முறையை ஆராய்ந்து சீரமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.மேலும் அமெரிக்கத் தலைமையிலான இராக் மீதான ஆக்கிரமிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார்.போப்பின் இந்தக் கோரிக்கை, சர்சுடைய புனித வாரப் பண்டிகைக் கொண்டாட்டம் துவங்கும் ஞாயிறு அன்று நடந்த திருச்சபையின் குருத்தோலைக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் இறுதியில் முன்வைக்கப் பட்டது.கடந்த வியாழன் (13.3.2008) அன்று ஆர்ஷ் பிஷப் பாவ்லொஸ் ஃபராஜ் ராஹோ அவர்களுடைய உடல் மோசூலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் 29.2.2008 அன்று கடத்தப் பட்டிருந்தார். ராஹோவின் கொலையை, "மனிதாபிமானமற்ற வன்முறைச்செயல்'' என்றும் "இது மனித நேயத்தின் அந்தஸ்தையே தாக்கியுள்ளது" என்றும் பெனெடிக்ட் அவர்கள் குறிப்பிட்டார். கொலை செய்யப்பட்ட ஆர்ச் பிஷப் ராஹோவின் ஏசு கிருஸ்து மீதுள்ள நம்பிக்கையைப் பெரிதும் புகழ்ந்து, "அவர் தமக்கு பல பயமுறுத்தல்கள் கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் தமது ஜெபக்கூட்டத்தை கைவிடாமல் தமது பணியைத் தொடர்ந்தார்" என்று ஞாயிறுக் கூட்டத்தில் பெனெடிக்ட் கூறினார். கத்தோலிக்க சர்ச்சின் புனித வாரத்தின் துவக்க விழாவில் ராஹோவின் இந்த மரணத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்த வாரத்தை (கிருத்துவ) நம்பிக்கையாளர்கள் புனித வாரமாகவும் ஏசு கிருஸ்து அவர்கள் பெற்ற துன்பத்தையும் மரணத்தினையும் நினைவு கூர்வர். பெனெடிக்ட் மேலும் கூறியதாவது: ராஹோவின் கத்தோலிக்க சர்ச்சுக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் அவரது மரணமும் இந்தக் கடுமையான வேதனைக்குரலை எழுப்பிடவும் இராக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் துவங்கி நிகழ்ந்து வரும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தம்மைத் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.இதனூடே போப் பெனெடிக்ட் அவ்வப்போது இராக்கிய கிருத்துவச் சமுதாயத்தினர்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் விமர்சித்து இருக்கிறார். சென்ற ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடம் இராக்கிய கிருத்துவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்! 

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment