skip to main |
skip to sidebar
ஆமதாபாத்: சேவக் அதிரடியை கட்டுப்படுத்த தென் ஆப்ரிக்க அணி புதிய திட்டம் வகுத்துள்ளது. `பவுன்சர்' மழை பொழிந்து இவரது விக்கெட்டை கைப்பற்ற வியூகம் அமைத்து
ஆமதாபாத்: சேவக் அதிரடியை கட்டுப்படுத்த தென் ஆப்ரிக்க அணி புதிய திட்டம் வகுத்துள்ளது. `பவுன்சர்' மழை பொழிந்து இவரது விக்கெட்டை கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் நாளை ஆமதாபாத்தில் துவங்குகிறது. காயம் காரணமாக சச்சின் நீக்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் யுவராஜ், கைப் இடையே போட்டி காணப்படுகிறது. இவர்களில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது. இஷாந்த் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இவரை அவசரப்பட்டு அணியில் சேர்த்தால் சிக்கல் ஏற்படலாம். இப்படி இந்திய அணிக்கு தலைக்கு மேல் பிரச்னைகள் உள்ளன. தொடருமா அதிரடி?: ஆனால் தென் ஆப்ரிக்க அணிக்கு இருக்கும் ஒரே பிரச்னை சேவக் தான். சென்னை டெஸ்டில் அதிவேகமாக 300 ரன்களை விளாசிய இவர், மீண்டும் அதிரடி காட்டுவாரா என்று அஞ்சுகிறது. எனவே இவரை வீழ்த்த `பவுன்சர்' ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இவரது உடலை ஒட்டி `பவுன்சர்' வீசும் போது, விக்கெட்டை இழந்து விட வாய்ப்பு உள்ளதாம். இது பற்றி தென் ஆப்ரிக்க பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியது: சென்னையில் சேவக்கின் ஆட்டம் பிரமிக்க வைத்தது. அதிரடியாக விளையாடி அசத்தினார். இவரை கட்டுப்படுத்த தொடர்ந்து `பவுன்சர்' வீச திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். தற்போது புல் காணப்படுகிறது. இது சாதகமான விஷயம். வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க்கில் இத்தகைய தட்பவெப்பம் தான் நிலவும். இந்தியாவில் எஸ்.ஜி., வகை பந்துகளில் விளையாடி பழக்கம் ஏற்பட்டு விட்டது. இவை ஆமதாபாத் ஆடுகளத்தில் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதல் போட்டியில் எங்களது பேட்ஸ் மேன்கள் மிகச் சிறப்பாக ஆடினார்கள். `ஸ்பின்னர்களை' சுலபமாக சமாளித்தார்கள். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சமபலத்தில் உள்ளது. எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப் பற்றக் கூடிய பவுலர்கள் அணியில் உள்ளனர். 5 பவுலர்கள்: சச்சின் நீக்கப்பட்ட நிலையில் கைப் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு வலு சேர்க்கிறது. உள்ளூர் போட்டிகளில் கைப் நிறைய ரன் எடுத்தள்ளார். தோனி, பதான் ஆகிய இரண்டு ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால், ஆமதாபாத் போட்டியில் 5 பவுலர்கள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மிக்கி ஆர்தர் கூறினார். சூப்பர் ஆடுகளம் : சென்னை ஆடுகளம் பற்றி அதிகமாக விமர்சிக்கப்பட்டது. பேட்டிங் சொர்க்கபுரியாக இருந்ததால், ஆயிரத்து 500 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. இம்முறை ஆமதாபாத்தில் மிகச் சிறந்த ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாக பராமரிப்பாளர் திராஜ் பார்சனா தெரிவித்தார். " சென்னையை விட சிறந்த ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் ஒத்துழைக்கும். துவக்கத்தில் வேகப்பந்துவீச்சு எடுபடும். பின்னர் `ஸ்பின்னர்கள்' சாதிக்கலாம்," என்றார். இங்கு கடந்த 1996ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஷ்ரீநாத் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றி தேடி தந்தார். இது ஸ்டைன், நிடினி உள்ளிட்ட வேகங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். தேறுவாரா கும்ளே?: இந்திய கேப்டன் கும்ளேவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு இன்று உடல் தகுதி சோதனை நடக்கிறது. இதில் தேறினால் மட்டுமே இரண்டாவது டெஸ்டில் இடம் பெற முடியும்.Dhiyanes Nanjai
No comments:
Post a Comment