Tuesday, June 10, 2008

THE HOLY QURAN
[1:1] "In the name of GOD, Most Gracious, Most Merciful.
[1:2] Praise be to GOD, Lord of the universe.
[1:3] Most Gracious, Most Merciful.
[1:4] Master of the Day of Judgment.
[1:5] You alone we worship; You alone we ask for help.
[1:6] Guide us in the right path:
[1:7] the path of those whom You blessed; not of those who have deserved wrath, nor of the strayers."

Scholarships to Muslim students

List of Organisations offering scholarships to Muslim students

We, at MG, receive a lot of queries on scholarships. We are presenting details of some organisations below. We will strive to add more organisations to this list and frequently update this page. #It is not necessary that the following organizations/institutes offer scholarships only to Muslim students.

http://www.milligazette.com/misl/scholarship_muslim_students_organisations.htm

Tuesday, April 1, 2008

Allah fish


Allah fish' surfaces in Parangipettai waters
By A.V. Ragunathan
Patterns resembling Arabic characters on the body of the `Allah fish', which was found in Parangipettai, near Chidambaram.
CUDDALORE Nov. 15. A marine phenomenon, `Allah fish', has occurred in the coastal waters of Parangipettai near Chidambaram in Cuddalore district. As the fish made an appearance during the holy month of Ramadan, it has evoked interest among the residents of Parangipettai and the surrounding areas.
The fish, held in veneration by Muslims, was found in a catch a couple of days ago, T. Balasubramanian, director, Centre of Advanced Study in Marine Biology of Annamalai University, told The Hindu. It was kept in the museum of the Centre for public viewing from 10 a.m. to 5 p.m. on working days.
The bright brown fish, about 30 cm in length and 10 cm in width, carried patterns resembling Arabic characters, on one side of the body reading "Laillah Illalah" (there is no God but Allah) and, on the other, "Sahni Allah" (warning from God).
Its other popular names are `Koran fish' and `Koran Angel'. Mr Balasubramanian said that it was in Parangipettai that followers of Prophet Mohammed, including his grandson, Syed Sahib, attained martyrdom.
The 360-odd dargahs present at Parangipettai bore testimony to this fact. It was here that poet Ummaru recited Seerapuranam.
Mr. Balasubramanian and S. Ajmal Khan of the centre said the scientific name of the Allah fish was pomacanthus semicirculatus and it belonged to the family pomacanthidae.
In India the fish was found in the Gulf of Mannar and the Palk Straits, besides at Parangipettai. Coral reefs were its favourite habitat.
It also occurred in the coastal waters of Africa, Korea, Japan, Australia and Polynesia, the director
கல்வி உதவித்தொகை அறிவிப்பு
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான உதவி தொகை1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 50% குறைவில்லாது மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டுவருமானம் 1லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.11 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் படிப்புகளுக்கு ஆண்டு வருமானம் 2.50லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் விபரம் அறிய: http://www.minorityaffairs.gov.in/
(B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION )கல்வி உதவித்தொகை அறிவிப்புபி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்நோக்கம்: சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்.தகுதி: நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.விதிமுறைகள்: ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும். படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும். படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்http://www.bsazakaat.org/பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008( முதலாம் ஆண்டு தொழில் நுட்ப படிப்புகள் ) ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ) ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATIONBUHARI BUILDINGNO 4 MOORES ROAD,CHENNAI 600 006PHONE : 044 4226 1100FAX : 044 2823 1950http://www.bsazakaat.ஒர்க்/E mail : admin@bsazakaat.org,bsazakaat@gmail.comதகவல் மூலம் : சமரசம் உள்ளிட்ட சமுதாய பத்திரிக்கைகள்.(நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல் என்பதாலும், பணம் வைத்துக்கொண்டு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிற செல்வந்தர்களுக்கு வழிகாட்டும் என்பதாலும் இத்தகவல் வெளியிடப்படுகிறது. மேல் விபரங்களுக்கு நமதூர் கல்விக்குழுவை அணுகவும்)
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

இராக்கின் அமைதிக்காக உரத்தக் குரலெழுப்பியுள்ளார்.






போப் பெனெடிக்ட் XVI அவர்கள் இராக்கின் அமைதிக்காக உரத்தக் குரலெழுப்பியுள்ளார். தமது மிகவும் கடுமையான முறையிலான கோரிக்கையைக் கடந்த (16.03.2008) ஞாயிற்று கிழமையன்று அவர் வெளியிட்டார். கடத்தப் பட்ட சால்டியன் கத்தோலிக் ஆர்ச் பிஷப்பின் உடல் மோசூல் நகரத்தின் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அவர் இக்கோரிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இராக்கில் தொடரும் இடைவிடாப் போரினால் இராக்கியர்கள் சமூக வாழ்க்கை முழுதும் சீர்குலைந்து விட்டதாக அதில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ''பலிகள் போதும்; வன்முறைகள் போதும்; இராக்கில் நிலவும் வெறுப்புணர்வுகள் போதும்" என்று பெனெடிக்ட் அவர்கள் ஸெயின்ட் பீட்டர் ஸ்குவெரில் ஞாயிறு அன்று நடந்த தமது திருச்சபையின் உரையின் இறுதியில் மக்களின் கைத்தட்டல் ஆதரவு முழக்கத்துக்கிடையில் கூறினார்.போப் அவர்கள் ஆழமான உணர்ச்சிகளுடன் இந்த உளப்பூர்வமான கோரிக்கையை விடுத்து, ''இராக்கில் படுகொலைகளையும் வன்முறைகளையும் வெறுப்புணர்வுகளையும் நிறுத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.''அதே நேரத்தில் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் போரினால் ஏற்பட்ட தனிப்பெரும் இழப்புகளும் சமூக வாழ்வில் ஏற்பட்ட சீர்குலைவையும் பாதிப்புகளையும் தாங்கி வரும் இராக்கிய மக்களிடமும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்: "இராக்கில் உள்ள எல்லா மத-இனக் குழுக்களும் பழங்குடிக் குழுவினரும் ஒன்றிணைந்து, தங்களுக்கிடையே மன்னிப்பு, நீதி, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் போன்ற சுமுகநிலையை உருவாக்கித் தலை நிமிர்ந்து வாழ்வதற்கானத் தங்கள் வாழ்க்கை முறையை ஆராய்ந்து சீரமைத்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.மேலும் அமெரிக்கத் தலைமையிலான இராக் மீதான ஆக்கிரமிப்புக்குக் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார்.போப்பின் இந்தக் கோரிக்கை, சர்சுடைய புனித வாரப் பண்டிகைக் கொண்டாட்டம் துவங்கும் ஞாயிறு அன்று நடந்த திருச்சபையின் குருத்தோலைக் கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையின் இறுதியில் முன்வைக்கப் பட்டது.கடந்த வியாழன் (13.3.2008) அன்று ஆர்ஷ் பிஷப் பாவ்லொஸ் ஃபராஜ் ராஹோ அவர்களுடைய உடல் மோசூலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அவர் 29.2.2008 அன்று கடத்தப் பட்டிருந்தார். ராஹோவின் கொலையை, "மனிதாபிமானமற்ற வன்முறைச்செயல்'' என்றும் "இது மனித நேயத்தின் அந்தஸ்தையே தாக்கியுள்ளது" என்றும் பெனெடிக்ட் அவர்கள் குறிப்பிட்டார். கொலை செய்யப்பட்ட ஆர்ச் பிஷப் ராஹோவின் ஏசு கிருஸ்து மீதுள்ள நம்பிக்கையைப் பெரிதும் புகழ்ந்து, "அவர் தமக்கு பல பயமுறுத்தல்கள் கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் தமது ஜெபக்கூட்டத்தை கைவிடாமல் தமது பணியைத் தொடர்ந்தார்" என்று ஞாயிறுக் கூட்டத்தில் பெனெடிக்ட் கூறினார். கத்தோலிக்க சர்ச்சின் புனித வாரத்தின் துவக்க விழாவில் ராஹோவின் இந்த மரணத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்த வாரத்தை (கிருத்துவ) நம்பிக்கையாளர்கள் புனித வாரமாகவும் ஏசு கிருஸ்து அவர்கள் பெற்ற துன்பத்தையும் மரணத்தினையும் நினைவு கூர்வர். பெனெடிக்ட் மேலும் கூறியதாவது: ராஹோவின் கத்தோலிக்க சர்ச்சுக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் அவரது மரணமும் இந்தக் கடுமையான வேதனைக்குரலை எழுப்பிடவும் இராக்கில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே வாரம் துவங்கி நிகழ்ந்து வரும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டிய நிலைக்குத் தம்மைத் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.இதனூடே போப் பெனெடிக்ட் அவ்வப்போது இராக்கிய கிருத்துவச் சமுதாயத்தினர்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் விமர்சித்து இருக்கிறார். சென்ற ஆண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷிடம் இராக்கிய கிருத்துவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.






மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்! சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார்.
Yaseen

டாம்கோ சார்பாக சிறு வணிக கடன் வழங்கும் விழா


தமிழ்நாடு கூட்டுவுத்துறையின் டாம்கோ சார்பாக சிறு வணிக கடன் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஷாதிமஹாலில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பல சுயஉதவிக்குழுக்கள் கலந்து கொண்டு சுமார் 15 லட்சத்திற்க்கான சிறு வணிக கடன்கள கலெக்டர் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். கலெக்டர் பேசுகையில் சுயஉதவிக்குழுக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் குழுக்களுக்கு இதுவரை சுமார் 80 லட்சம் அளவில் சிறு வணிக கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று பேசினார். இதில் தாசில்தார், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அருகிலுள்ள காஜியார் சந்தில் சரியில்லாத வகையில் போடப்படும் சிமெண்ட் ரோட்டினை குறிப்பிட்டு ஜனாப். சுல்தான் சேட் அவர்கள் முறையிட்டதின் பேரில் அவ்விடத்திற்கு வந்து கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்தார். முடிவில் சாலையினை முறையாக போட உத்திரவிட்ட கலெக்டர் அதற்கு மேலதிகமாக ஆகும் செலவில் மூன்றில் இரண்டு பங்கினை தான் ஏற்பதாகவும் அறிவித்தார். இந்த அமளிதுமளிகளில் சின்னக்கடையில் பிசியான போக்குவரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.